நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், முன்னேற்பாட்டு பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அந்தவகையில், ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தேர்தல் ஆணையர்கள் சென்று மக்களவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், இந்தியா முழுவதும் 96.88 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று (பிப்ரவரி 9) அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் 96.88 கோடி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை ஒப்பிடும் போது 6 சதவிகிதம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி கணக்கின்படி, இந்தியாவில் 96,88,21,926 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்கள், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர்.
18-19 வயதிற்குட்பட்டோர் 1,84,81,610 வாக்காளர்களும், 20-29 வயதிற்குட்பட்டோர் 19,74,37,160 வாக்காளர்களும், 80 வயதிற்கு மேற்பட்டோர் 1,85,92,918 வாக்காளர்களும் உள்ளனர்.
வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பதிவு செய்யலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாரத் ரத்னா எஃபெக்ட்: பாஜகவை ஆதரிக்கும் சரண் சிங் பேரன்
எலக்ஷன் ஃப்ளாஷ்: நட்டா வருகை… திமுகவுக்கு ஷாக் கொடுக்குமா பாஜக?