எஸ்.பி.ஐ வழங்கிய தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், இதுவரை எவ்வளவு பத்திரங்கள் பெறப்பட்டுள்ளது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எஸ்.பி.ஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று முன் தினம் எஸ்.பி.ஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வழங்கியது.
அதனை உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 14) வெளியிட்டுள்ளது.
இதில் முத்தூட் நிதி நிறுவனம், ராம்கோ, சன் பார்மா, வேதாந்தா, பாரதி ஏர்டெல், ஐடிசி, ஃபினொலெக்ஸ், எம்.ஆர்.எஅப்., பிலிப்ஸ் கார்பன், ஸ்பைஸ்ஜெட், சுப்ரிம் இண்டஸ்ட்ரீஸ், ஜே.கே.சிமெண்ட், மிட்டல், யசோதா மருத்துவமனை, சென்னை கீரின் வுட்ஸ் ப்ரைவேட் லிமிடெட் என பல்வேறு கார்பரேட் நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
12 ஏப்ரல் 2019 முதல் 11 ஜனவரி 2024 வரையில் எந்தெந்த நிறுவனங்கள் வழங்கியிருக்கிறது என தேர்தல் ஆணையம் தரவுகளை வெளியிட்டுள்ளது.
தேர்தல் பத்திர விவரங்கள் : https://www.eci.gov.in/disclosure-of-electoral-bonds
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இரு நாட்களில் தொகுதி முடிவு : செல்வப்பெருந்தகை பேட்டி!
UPI: கூகுள் பே, போன் பே எல்லாம் ஓரமா போங்க… சவால் விடும் ஜியோவின் புதுவரவு!