விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் விசிக இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. சிதம்பரம் தொகுதியில் அக்கட்சி தலைவர் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்க முதலில் தேர்தல் ஆணையம் மறுப்புத் தெரிவித்தது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது.
இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
இந்தசூழலில் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி விசிகவுக்கு பானை சின்னத்தை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு திமுக, விசிகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்
பிரியா
டிஜிட்டல் திண்ணை: பம்பரம் இல்லை… பானைக்கு சிக்கல்… திமுக ரியாக்ஷன் இதுதான்!
டேனியல் பாலாஜி மறைவு : கமல், சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்!