தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, புதிதாக களத்தில் இறங்கியுள்ள தவெக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்தசூழலில், வரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை வாக்காளர் சுருக்க திருத்த பட்டியல் பணிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிகளை மேற்கொள்ள தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

ஒவ்வொரு தொகுதிக்கும் கூடுதல் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், உதவி ஆட்சியர் நிலையில் உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், இடமாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கான பணிகளை மேற்கொள்வார்கள். Election commission appoints electoral registration officer
