மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 26) காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை முதல் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அந்தவகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, நடிகர்கள் மம்முட்டி, பிரகாஷ் ராஜ், ஃபகத் ஃபாசில் உள்ளிடோர் தங்களது வாக்குகளை செலுத்தினர். மதியம் 1 மணி நிலவரப்படி 88 தொகுதிகளிலும் 39.13 சதவிகிதம் வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மதியம் 1 மணி நிலவரம்
கர்நாடகா – 38.23 %
மேற்கு வங்கம் – 47.29%
அஸ்ஸாம் – 46.31%
உத்தர பிரதேசம் – 35.73%
சத்தீஸ்கர் – 53.09%
மத்திய பிரதேசம் – 38.96%
ராஜஸ்தான் – 40.39%
கேரளா – 39.26%
திரிபுரா – 54.47%
ஜம்மு காஷ்மீர் – 42.88%
பிகார் – 33.80%
மகாராஷ்டிரா -31.77%
மணிப்பூர் -54.26%
செல்வம்