பிரதமர் மோடிக்கு எகிப்தின் உயரிய விருது!

Published On:

| By Kavi

பிரதமர் மோடிக்கு எகிப்தின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருது வழங்கப்பட்டது.

பிரதமர் மோடி 6 நாள் அரசு முறை பயணமாக டெல்லியிலிருந்து கடந்த 21ஆம் தேதி அமெரிக்கா, எகிப்துக்குப் பயணம் மேற்கொண்டார். அமெரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று எகிப்துக்கு சென்றார். கெய்ரோ விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, எகிப்து பிரதமர் முஸ்தபா உற்சாகமாக வரவேற்றார். பிரதமர் மோடி மற்றும் எகிப்து பிரதமர் முஸ்தபா மத்தவுலி இடையே முதன்முறையாக வட்ட மேசை மாநாடு நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று (ஜூன் 25) கெய்ரோவில் உள்ள எகப்து அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி, பிரதமர் மோடிக்கு எகிப்தின் உயரிய சிவிலியன் விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருதை வழங்கினார்.

எகிப்து அதிபர் சிசி வழங்கிய இந்த கௌரவத்திற்கு இந்திய மக்கள் சார்பாகப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் பிரதமர் மோடி ஆவார்.

ADVERTISEMENT

எகிப்து பயணத்தின் ஒரு பகுதியாக கெய்ரோவில் உள்ள ஹீலியாபோலிஸ் காமன்வெல்த் போர் நினைவிடத்திற்கும் சென்றார். முதல் உலகப் போரின்போது எகிப்து மற்றும் ஏடனில் உயிர்த் தியாகம் செய்த 4300க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களுக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

அதுபோன்று கெய்ரோவில் உள்ள அல்-ஹக்கீம் மசூதிக்குச் சென்றார். அல்-ஹக்கீம் மசூதி நிர்வாகம் சார்பில் மோடிக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து கிசா பிரமிடுகளைப் பார்வையிட்டு, புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

ADVERTISEMENT

இந்த பயணத்தின்போது, வருகிற செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டுக்கு வரும்படி எகிப்து அதிபருக்குப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இன்று மாலை எகிப்து பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்.

பிரியா

முதல் மரியாதை : முன்னாள் எம்.எல்.ஏ வீடு சூறை!

வருகிறது ஓபிஎஸ்-சின்  ‘தொண்டன்’  டிவி- பேப்பர்! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share