இங்கிலீஷ் பிரிமியர் லீக் தொடரில் 3 தோல்விகளை மட்டுமே சந்தித்த அணி செல்சே. அதனால் தற்போது புள்ளிப்பட்டியலில் அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ளது. தற்போது இங்கிலீஷ் பிரிமியர் லீக்கின் இரண்டாம் பாதி நடைபெற்று வருகிறது. அதன் படி முதல் பாதியில் செல்சே அணி அடைந்த மூன்று தோல்விகளில் அர்செனால் அணியுடனான போட்டியில் 3-0 என்ற தோல்வியும் ஒன்று.
அதன் பின்னர் இதுவரை செல்சே அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் தோல்வியடைந்துள்ளது. இன்றிரவு நடைபெறும் போட்டியில் மீண்டும் அர்செனால் மற்றும் செல்சே அணிகளும் விளையாட உள்ளதால் வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இன்று நடைபெறும் மற்றொரு போட்டியில் லிவர்பூல் அணி, ஹுல் சிட்டி அணிகள் விளையாடுகின்றன. கடைசியாக விளையாடிய போட்டியில் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ள மான்செஸ்டர் அணியை, பட்டியலில் கடைசியில் உள்ள ஹுல் சிட்டி அணி தோற்கடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்று நடைபெறும் போட்டியில் லிவெர்பூல் அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேற முடியும். அதே போல் அர்செனால் அணியும் வெற்றி பெற்றால் இரண்டாம் இடத்தினை கைப்பற்றும். எனவே இன்று நடைபெறவிருக்கும் போட்டிகளில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு கால்பந்து ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.