சம வேலைக்கு சம ஊதியம் கோரி 26 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் உடனே பணிக்குத் திரும்ப பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், ஊதிய முரண்பாடுகளைக் களைய கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 26 நாட்களாக இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய நிலையில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நேற்று இடைநிலை ஆசிரியர்கள் நடத்தினர்.
இதேபோல பகுதி நேர ஆசிரியர்களும் தொடர் போராட்டம் நடத்துகின்றனர்.
இதனிடையே இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு உடனே திரும்ப வேண்டும்; இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு திரும்பும் போது மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலரின் அனுமதிப் பெறுவது கட்டாயம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
