தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க கல்வித்துறை அழைப்பு : முழு விவரம்!

Published On:

| By christopher

Education department invites to apply for National Best Teacher Award!

2024 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்குமாறு மத்திய கல்வி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதியை ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த நாளில் நாடு முழுவதும் சிறப்பாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

ADVERTISEMENT

நல்லாசிரியர் விருதுக்கு முதலில் உயர் கல்வி அமைச்சகம் சார்பில் பொறியியல் மற்றும் டிப்ளமோ, கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தற்போது பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் யார்?

ADVERTISEMENT
  • பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள்
  • மாநில அரசு, யூனியன் பிரதேசப் பள்ளி ஆசிரியர்கள்
  • மத்திய அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், ஜவஹர் நவோதயா பள்ளிகள், சைனிக் பள்ளிகள், ஏக்லவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள்
  • சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ பள்ளி ஆசிரியர்கள்.

விதிமுறைகள் என்ன?

  • குறைந்தது 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
  • ஒப்பந்த ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடியாது.
  • விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் டியூஷன் எடுக்கக் கூடாது.

National Award for Teachers 2024: தேசிய நல்லாசிரியர் விருது; ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி? முழு விவரம்

விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி தேதி!

இதுகுறித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனிதவள மேம்பாட்‌டுத்துறை இயக்குநரின்‌ கடிதத்தில்‌ 2024 ஆம்‌ ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர்‌ விருதிற்கு விண்ணப்பிக்கும்‌ ஆசிரியர்கள்‌ அவர்தம்‌ விவரங்களை நேரடியாக http://nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதளம்‌ மூலம்‌ 27.06.2024 முதல்‌ 15.07.2024 ஆம்‌ தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்‌ ஒவ்வொரு மாவட்டத்திலும்‌, கீழ்க்கண்டவாறு மாவட்டத்‌ தேர்வுக்குழு அமைக்கப்பட்டு ஆசிரியர்களைத்‌ தேர்வு செய்து மாநிலத்‌ தேர்வுக்‌ குழுவிற்கு தேர்வு பட்டியலை 25.07.2024 தேதிக்குள்‌ இணையதளம்‌ வாயிலாக அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்‌டுள்ளது.

மாவட்டத்‌ தேர்வுக்‌ குழுவில்‌ சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ தலைவராகவும்‌, மாநிலப்‌ பிரதிநிதியாக ஒருவரும்‌, மாவட்ட ஆட்சியரின்‌ பிரிதிநிதியாக சிறந்த கல்வியாளர்‌ ஒருவரையும்‌ உட்படுத்தி மாவட்ட தேர்வுக்‌ குழுவினை அமைக்க வேண்டும்.

மாவட்ட நிலையில்‌ விண்ணப்பித்த ஆசிரியர்களின்‌ விவரங்களை பரிசீலித்து, ஒரு மாவட்டத்திற்கு மூன்று ஆசிரியர்கள்‌ வீதம்‌ தேர்வு செய்து, மாநிலத்‌ தேர்வுத்‌ குழுவிற்குப்‌ பரிந்துரைக்க வேண்டும்‌.

மாவட்டத்‌ தேர்வுக்‌ குழுவில்‌ சம்பந்தப்பட்ட மாவட்டத்தின்‌ மாவட்ட ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவனத்தின்‌ முதல்வர்‌ மாநிலப்‌ பிரதிநிதியாக செயல்படுவார்‌.

மேலும்‌, மாவட்ட ஆட்சியரின்‌ பிரதிநிதியாக சிறந்த கல்வியாளர்‌ சார்ந்த விவரங்களை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ இருந்து பெற்று, அவரை மாவட்டத்‌ தேர்வுக்குழு உறுப்பினராக உட்படுத்தி, தேசிய நல்லாசிரியர்‌ விருதிற்கான மாவட்டத்‌ தேர்வுக்‌ குழுவினை அமைத்து தேசிய நல்லாசிரியர்‌ விருதிற்கான நல்லாசிரியரைத்‌ தேர்ந்தெடுக்கும்‌ பணியினை 25.07.2024 மாலை 05 மணிக்குள்‌ முடிக்க வேண்டும்.

மேலும்‌, மாவட்டங்களில்‌ இருந்து தேசிய நல்லாசிரியர்‌ விருதிற்கான ஆசிரியர்களின்‌ விண்ணப்பங்களைப்‌ பரிசீலனை செய்யும்‌போது, மத்திய மனிதவள மேம்பாட்டுத்‌ துறை இயக்குநரின்‌ கடிதத்தில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளைக்‌ கவனத்தில்‌ கொண்டு, எவ்வித புகாருக்கும்‌ இடமின்றி செயல்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மீன்பிடி படகுகளுக்கு வழங்க இருந்த 9,000 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்!

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: இதுவரை பாலஸ்தீனர்கள் 38,011 பேர் பலி!

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share