”ஷங்கருடன் பணியாற்றியது கொடூரமாக இருந்தது” : பிரபல எடிட்டர் குற்றச்சாட்டு!

Published On:

| By christopher

Editor Shameer Muhammed use horrible word with shankar

கேம் சேஞ்சர் படத்திற்காக இயக்குநர் ஷங்கர் சாருடன் பணிபுரிந்தது ஒரு விரும்பத்தகாத அனுபவமாக இருந்தது என பிரபல திரைப்பட எடிட்டர் ஷமீர் முகமது பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Editor Shameer Muhammed use horrible word with shankar

பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி நடிப்பில் இந்தாண்டு பொங்கலையொட்டி பான் இந்தியா திரைப்படமாக வெளியானது கேம் சேஞ்சர்.

இந்தியன் 2க்கு பிறகு வெற்றிக்காக ஏங்கிய ஷங்கருக்கும், இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஏமாற்றமளித்து தோல்விப்படமாக அமைந்தது.

இந்த நிலையில் பிரபல மலையாள திரைப்பட எடிட்டர் ஷமீர் முகமது, சமீபத்தில் கௌமுதி மூவிஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், கேம் சேஞ்சர் படத்தில் பணிபுரிந்தபோது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தைப் பற்றி மனம் திறந்து பேசினார்.

அதில், ”கேம் சேஞ்சர் படத்தில் ஷங்கர் சமர்ப்பித்த ஒரிஜினல் காட்சிகள் 7.5 மணி நேரத்திற்கும் மேலாக இருக்கும். அதனை ஒரு சரியான படமாக ட்ரிம் செய்து தருமாறு சொன்னார். அதன்படி நானும் அதை மூன்று மணிநேர படமாக மாற்றினேன். ஒருக்கட்டத்தில் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன். உண்மையில் சொல்வதென்றால், ஷங்கர் சாருடன் பணிபுரிந்தது ஒரு விரும்பத்தகாத கொடூர அனுபவமாக மாறிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் ஷங்கர் குறித்து மலையாள எடிட்டர் ஷமீர் முகமது கூறிய இந்த வார்த்தைகள் சர்ச்சையாக வெடித்துள்ளன. இதனையடுத்து அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஷமீர் இதுவரை சார்லி, அங்கமாலி டயரீஸ், ஹெலன், ஆராட்டு, காப்பா, மாளிகாபுரம், டர்போ, ஏஆர்எம், நேற்று வெளியான நரிவேட்டை உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.

கேம் சேஞ்சர் படத்தில் இருந்து ஷமீர் முகமது விலகிய பின்னர், அப்படத்தின் எடிட்டராக ரூபன் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share