பயிர் காப்பீடு: கடைசி தேதி நீட்டிக்கப்படுமா?

Published On:

| By Selvam

edappadi urge mk stalin crop insurance

பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கான கடைசி தேதியை டிசம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 15) வலியுறுத்தியுள்ளார். edappadi urge mk stalin crop insurance

தமிழகத்தில் சம்பா, தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி காலதாமதமாக தொடங்கியது.

அறுவடை முடிவடையாததாலும், தொடர் மழை, இணைய சேவை உள்ளிட்ட பிரச்சனைகளாலும் பல விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யவில்லை.

இந்தநிலையில் பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

edappadi urge mk stalin crop insurance

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்த ஆண்டு காவிரியில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், டெல்டா விவசாயிகள் ஆழ்துளை கிணற்றுப் பாசனம் மூலம் சம்பா சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இழப்பீடு பெற விவசாயிகள் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் அதற்குரிய சான்றிதழ் பெற்று இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்யும் பருவ மழையின் காரணமாக இணைய சேவை சரிவர கிடைக்காததால் எந்த விண்ணப்பங்களையும் உள்ளீடு செய்ய இயலாமல் விவசாயிகளும், இ-சேவை மைய ஊழியர்களும் தவித்த வண்ணம் உள்ளனர்.

edappadi urge mk stalin crop insurance

தொடர்ந்து விவசாயிகளும், விவசாய சங்கங்களும் கால நீட்டிப்பு செய்யும் கோரிக்கையினை எழுப்பியும்,

திமுக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கடுங்கோபத்தில் உள்ளனர்.

இந்நிலையில் பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசிநாள் என்ற நிலையில் இணைய வழி சேவை எப்பொழுது சீராகும் என்பது தெரியாத நிலையில்,

விவசாயிகளும், இ-சேவை மைய ஊழியர்களும் பயிர் காப்பீடு விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

எனவே, உடனடியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி தமிழகம் முழுவதும் பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கான கடைசி தேதியை டிசம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்க வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். edappadi urge mk stalin crop insurance

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விஜயபாஸ்கர் சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு!

ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு நாளை ஒத்திவைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share