தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் எடப்பாடி

Published On:

| By christopher

Edappadi started the election campaign

தனது சொந்த தொகுதியான சேலத்தில் அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து அக்கட்சி பொதுசெயலாளர்  எடப்பாடி பழனிசாமி வீதிவீதியாக சென்று மக்களிடம் இன்று (மார்ச் 24) காலை வாக்கு சேகரித்தார்.

40 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல் கட்டமான ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மார்ச் 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தற்போது அனைத்து கட்சி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ள அடுத்தக்கட்டமாக தேர்தல் பிரச்சாரத்தை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் திருச்சியில் கடந்த 22ஆம் தேதி தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.

அதனைதொடர்ந்து அக்கட்சி மற்றும் கூட்டணியின் மற்ற தலைவர்களும் தங்களது பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். இன்று மாலை 4 மணிக்கு திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள வண்ணாங்கோவில் அருகே திருச்சி வேட்பாளரை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பரப்புரை செய்கிறார்.

இன்று காலை சேலத்தில் இருந்து திருச்சிக்கு கிளம்புவதற்கு முன்னதாக, வீதியில் நடந்து சென்று சேலம் வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து மக்களிடம் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

மேலும் அதிமுக தேர்தல் பிரச்சார வீடியோவையும் எடப்பாடி இன்று வெளியிட்டுள்ளார். அதில், “அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே, உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அதிமுக தேர்தல்அறிக்கை.

வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறேன்!

நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளையும், மாநில உரிமைப் பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவை நேரில் பாராட்டிய சிம்பு

”எனது முன்னாள் நண்பருக்கு எதிராக போட்டியிடுகிறேன்” : டிடிவி தினகரன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share