”எடப்பாடி அவராகவே அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும்” என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். Edappadi should resign : ops warning
நெல்லையில் அதிமுக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 27) காலை நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதே போன்று நேற்று இரவே நெல்லை சென்றிருந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் இன்று காலை கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் இருவரும் தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்புவதற்காக ஒரே நேரத்தில் புறப்படவிருந்த விமானத்தில் டிக்கெட் புக் செய்திருந்தனர். இதனையறிந்த ஓபிஎஸ் தனது பயணத்தை மாற்றியமைத்து, மதுரை சென்று அங்கிருந்து புறப்பட்டு இன்று மதியம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

எடப்பாடிக்கு எச்சரிக்கை Edappadi should resign : ops warning
அப்போது அவரிடம், “இனி ஓபிஎஸை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளும் எண்ணமே இல்லை. பிரிந்தது பிரிந்ததுதான்” என்று எடப்பாடி நெல்லையில் தெரிவித்துள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “அதிமுகவில் பிரிந்திருக்கிற சக்திகள் இணைந்தால் தான் வெற்றி பெற முடியும். ஆனால் எந்தக் காலத்திலும் அதிமுக வெற்றி பெறக் கூடாது என எடப்பாடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
ஒற்றை தலைமை வந்தால் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம் என முன்பு கூறியிருந்தார்களே… இப்போது எடப்பாடி அவராகவே அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும். அதுதான் அவருக்கு மரியாதையாக இருக்கும். இல்லையென்றால் அவர் அவமரியாதையை சந்திப்பார்” என பன்னீர் தெரிவித்துள்ளார்.