“எடப்பாடி ரூட் மாறி போகிறார்” : உதயநிதி

Published On:

| By Kavi

Edappadi route is changing Udhayanidhi speech

சட்டப்பேரவையில் நான் பேசும் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். Edappadi route is changing Udhayanidhi speech

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 28) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை – வறுமை ஒழிப்பு மற்றும் ஊரக கடன்கள் துறை – சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை- திட்டம், வளர்ச்சி, மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை உள்ளிட்டவை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு, துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பதிலுரைத்தார்.

அப்போது பேசிய அவர், “அவசர பணியாக டெல்லி சென்று திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆகியோர் ஒருவாட்டிக் கூட நான் பதில் சொல்லும் போது இருப்பதில்லை. நானும் தொடர்ந்து  பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என் காரில் ஏறி செல்ல முயன்றார். என் காரை எடுத்துச் செல்லுங்கள் ஒன்றும் பிரச்சினை இல்லை என்று சொன்னேன். அப்போது முன்னாள் முதல்வர், எங்கள் கார் எங்கேயும் தப்பாக போகாது என்று சொன்னார்.

ஆனால் மூன்று காரில் ரூட் மாறி போய்க்கொண்டிருக்கின்றார்” என்று எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “பாசிஸ்டுகள் எத்தனை ‘ரூல்ஸ்’ போட்டு தமிழ்நாட்டை அடக்க நினைத்தாலும், பட்ஜெட்டில் ஒரே ஒரு ‘ரூ’ போட்டு அவர்களை அலறச் செய்துவிட்டார் முதல்வர்” என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக  பட்ஜெட் அறிவிப்பில் ‘₹’-க்கு பதில் ‘ரூ’ இலச்சினை மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Edappadi route is changing Udhayanidhi speech
 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share