தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக் கொள்கை தான் கடைபிடிக்கப்படும். அதில் எந்த மாற்றமும் இருக்காது. தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்களைப் பார்க்காமல், மக்களைப் பார்த்து நிதி ஒதுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். edappadi question mkstalin on pocso
வேலூர் மாவட்டத்தில் அதிமுக இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறை லட்சிய மாநாடு ‘இலக்கு 202’ என்ற தலைப்பில் இன்று (பிப்ரவரி 16) நடைபெற்றது. ‘
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுச்சியுரையாற்றினார்.
அதிமுக யாரை நம்பியும் செயல்பட்டதில்லை! edappadi question mkstalin on pocso
அவர் பேசுகையில், “சென்னை கோட்டைக்கு செல்வதற்காகவே வேலூர் கோட்டையில் திரண்டுள்ளோம்; கோட்டையில் இருப்பவர்களை வீட்டிற்கு அனுப்பும் கூட்டம்தான் இந்த வேலூர் மாநாடு. இன்று அதிக இளைஞர்களை கொண்டிருக்கும் கட்சி அதிமுக. இந்த வலுவுடன் 2026ல் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடும்.
எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை பாஜகவின் குரலாக உள்ளது என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவருக்கு சொல்கிறேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் தொடங்கி அதிமுக யாரை நம்பியும் செயல்பட்டதில்லை.

திமுக கூட்டணியை நம்பி இருக்கிறது. ஆனால் அதிமுக மக்களை நம்பி மட்டுமே இருக்கிறோம். அதிமுக, கூட்டணிக்காக யாரையும் நாடி செல்வது கிடையாது, எங்களை நாடிதான் மற்றவர்கள் வருவார்கள்.
மக்கள் தன்னை ‘அப்பா, அப்பா’ என்று அழைப்பதாக பெருமைப் பொங்க கூறுகிறார். 3 வயது சிறுமிகள் முதல் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், ‘அப்பா’, ’அப்பா’ என கதறுவது முதல்வருக்கு கேட்கவில்லையா? தமிழகத்தில் 2025 ஜனவரி முதல் பிப்ரவரி 14 வரை சுமார் 107 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன.
அதிமுக ஆட்சியில் சென்னைக்கு வந்த மோடியை பார்த்து ‘கோ பேக் மோடி’ என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் சொன்னார். இன்று ஆளுங்கட்சியான பிறகு ’வெல்கம் மோடி’ என்று வெள்ளைக்கொடி பிடிக்கிறார்.
மக்களைப் பார்த்து நிதி ஒதுக்குங்கள்! edappadi question mkstalin on pocso
அதிமுகவை பொறுத்தவரை கொள்கை வேறு. கூட்டணி வேறு. 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய வெற்றிக் கூட்டணி அமையும்.
திமுகவுக்கு கொள்கையும் கிடையாது. கூட்டணியும் கிடையாது. 1999 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்துவிட்டு, 2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தார். இப்படி அடிக்கடி நிறம் மாறும் கட்சி தான்.
மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் மறுக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை கடைப்பிடித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சொல்வது சரியல்ல. தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது. மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்க நிர்பந்தப்படுத்துவது சரியல்ல. தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக் கொள்கை தான் கடைபிடிக்கப்படும். அதில் எந்த மாற்றமும் இருக்காது. தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்களைப் பார்க்காதீர்கள்; மக்களைப் பார்த்து நிதி ஒதுக்குங்கள். அதேபோன்று 100 நாள் வேலைத்திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதியை ஏழைப் பெண்களை பார்த்து மத்திய அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று எடப்பாடி கூறினார்.