அவசரமாக ஸ்கூட்டியில் புறப்பட்ட எடப்பாடி : ஏன்?

Published On:

| By Kavi

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருசக்கர வாகனத்தில் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது சொந்த ஊரான எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்துக்கு சென்றார்.

ADVERTISEMENT

பொங்கலை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தயாராக இருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் உறவினரான பழனிசாமி என்பவர் உயிரிழந்து விட்டதாக தகவல் வந்துள்ளது.

இதனால் பொங்கல் விழாவை கொண்டாடாமல் உடனடியாக அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவரின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி உறவினர் வீட்டிற்கு கிளம்பினார்.

ADVERTISEMENT

அவரது உதவியாளர் ஸ்கூட்டியை ஓட்ட எடப்பாடி பழனிசாமி பின்னால் அமர்ந்து கொண்டு சென்றார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், துக்க நிகழ்ச்சிக்கு செல்லும் போது இவ்வாறு தெரிவித்து கொண்டே செல்வதா என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ADVERTISEMENT
https://twitter.com/satyenaiadmk/status/1614565978981142529

பிரியா

சென்னையில் காணும் பொங்கல்: போக்குவரத்து மாற்றங்களுக்கு உதவும் RoadEaseapp!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share