அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்றும் இன்றும் (மே 29, 30) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. Edappadi Palaniswami urge district secretaries booth committee
காலை மாலை என இருவேளையிலும் மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டம் தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது,
“ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட செயலாளர், மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் என இரண்டு பேர் கலந்துகொண்டனர். அவர்களிடம் மாவட்டத்தில் என்ன பிரச்சனை இருக்கிறது, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

கூட்டத்தில் பேசிய அதிமுக கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் அருள்மொழி தேவன், ‘மாவட்டத்தில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனத்தை முழுமையாக முடித்து விட்டேன். மக்கள் மத்தியில் நமக்கு நல்ல எழுச்சி இருக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தான் நிச்சயமாக வெற்றி பெறுவோம்’ என்று பேசினார்.
தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”சில பூத் கமிட்டி உறுப்பினர்களின் போன் நம்பர் மாறியிருக்கிறது. வாக்காளர்களாக இல்லாதவர்களே ஒரு சில பூத்களில் பூத் கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனக்கு அனைத்து ரிப்போர்ட்டும் வந்திருக்கிறது. நீங்கள் அதை சரி செய்யுங்கள். இன்னும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்படாத மாவட்டங்களில் இரண்டு வாரங்களில் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.