அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு காட்டமாக பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 15) வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம். edappadi palaniswami speak about sengottaiyan
இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “அவரிடம் சென்று கேளுங்கள். அவரிடம் கேட்டால்தான் என்ன காரணம் என்று தெரியும். ஏன் தவிர்க்கிறீர்கள் என்று அவரை போய் கேளுங்க சார். தனிப்பட்ட பிரச்சினையை எல்லாம் இங்கு பேசாதீர்கள். எங்களுக்கு 62 எம்.எல்.ஏ.க்கள். ஆனால் இங்கு எத்தனை பேர் வந்திருக்கிறோம் பாருங்க… அவரவர்களுக்கு வேலை இருக்கும். இது சுதந்திரமாக செயல்படக் கூடிய கட்சி.
திமுக போல அடிமையாட்கள் இங்கு கிடையாது. நான் என்றைக்கும் யாரையும் எதிர்பார்த்தது கிடையாது. நான் ஒரு சாதாரண தொண்டன்… தலைவன் கிடையாது. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போகலாம். எங்களுக்கு ஒரே எதிரி திமுக. மற்ற கட்சிகள் எல்லாம் எங்களுக்கு எதிரியே கிடையாது. அதிமுகவில் கொடுக்கப்படும் சுதந்திரம் போல் வேறெங்கும் கிடையாது” என்று ஆவேசமாக கூறினார்
முன்னதாக கோவையில் அத்திக்கடவு அவிநாசி திட்ட பாராட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட போது அதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை. அப்போது முதல் அவர் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்து வருகிறார்.
நேற்று கூட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. edappadi palaniswami speak about sengottaiyan