“பெட்டி மீது தான் ஸ்டாலினுக்குக் கண்ணு”: எடப்பாடி பழனிசாமி

Published On:

| By Kavi

Edappadi Palaniswami slam mk stalin

Edappadi Palaniswami slam mk stalin

பெட்டி வாங்கி வாங்கி பழக்கம் என்பதால், ஸ்டாலினுக்கு பெட்டி மீதே கண் இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.

தருமபுரி மாவட்டம், அரூரில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் திருமண மண்டபத்தில், கொங்கு பல்நோக்குப் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று (பிப்ரவரி 5) நடைபெற்றது.

இதில் கலந்துகொள்வதற்காகத் தருமபுரி வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உழவு கருவிகளுடன் நடைபெற்ற உழவர்கள் பேரணியை டிராக்டர் ஓட்டி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கொங்கு பல்நோக்கு பயிற்சி ஆலய திறப்பு விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி,

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது எவ்வளவு பிரச்சினைகள் நடந்தது என்பதை நாடே அறியும்.

இப்போதைய முதல்வர், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட பலரும் கேலி செய்தார்கள். இன்னும் 10 நாள் ஆட்சியில் நீடிப்பாரா என்றெல்லாம் பேசினார்கள்.

ஆனால் நான்கு ஆண்டு இரண்டு மாதம் சிறப்பான ஆட்சியைக் கொடுத்து பல்வேறு திட்டங்களை மக்களுக்காக அளித்தோம்.

ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்து சரித்திரம் படைத்தோம்” என்று அதிமுக திட்டங்கள் குறித்து பேசினார்.

திமுகவின் நீட் தேர்வு ரத்து வாக்குறுதி மற்றும் கையெழுத்து இயக்கம் பற்றி பேசிய எடப்பாடி பழனிசாமி,

“ஒரே ஒரு கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னார்கள். ஆனால் மக்களிடம் பல லட்சம் கையெழுத்துகளைப் பெற்றனர். அதையும் உருப்படியாகச் செய்யவில்லை.

கூட்டணி கட்சியினர் உட்படப் பலதரப்பினரிடம் இருந்து வாங்கிய கையெழுத்துகள் சேலத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டு அரங்கில் குப்பைத் தொட்டிகளுக்குப் போனதை நாம் பார்த்தோம். இதுதான் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம்.

இதற்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று ஒரு திண்ணையில் பெட்ஷீட்டை விரித்து அமர்ந்து கொள்வார். ஒரு பெட்டியை வைத்துக்கொண்டு உங்களுடைய குறைகளை மனுவாக இந்த பெட்டியில் போடுங்கள்,  ஆட்சிக்கு வந்தவுடன் இந்த மனுக்களுக்குத் தீர்வு காணப்படும் என சொன்னார்.

ஆனால் பூட்டி வைத்திருந்த பெட்டியின் சாவி தொலைந்துபோய் இன்னும் கிடைக்கவில்லை போல. அந்த மனுக்கள் மீது தீர்வு காணப்படவில்லை.  இப்படி மக்களைக் கவர்ந்து ஆட்சிக்கு வந்து ஏமாற்றிவிட்டார் ” என தெரிவித்தார்.

அப்போது,  “ஸ்டாலினுக்குப் பெட்டி மீதுதான் கண் இருக்கும். ஏனென்றால் பெட்டி வாங்கி வாங்கி அவருக்குப் பழக்கம்” என்று கடுமையாக விமர்சித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

அமைச்சர்கள் மீதான சூமோட்டோ வழக்குகள்: நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் விசாரிக்கலாமா? உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Video: ‘தெறி’ இந்தி டைட்டில் இதுதான்!

Edappadi Palaniswami slam mk stalin

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share