தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் : ஸ்டாலினை சாடிய எடப்பாடி

Published On:

| By Selvam

Edappadi Palaniswami says tamil nadu narcotic drugs

ரூ.2000 கோடி மதிப்புள்ள சூடோபெட்ரின் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். நேற்று அவரது வீட்டிற்கு சீல் வைத்த போலீசார், இன்று ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பிசெல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மார்ச் 4-ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதைபொருள் பழக்கம் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 1) குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் எங்கெங்கு காணினும் போதை வஸ்துக்களால் நிரம்பியிருக்கின்ற இன்றைய சூழ்நிலை பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

பெற்றோர்களே, தாய்மார்களே இன்றைய தலைமுறையினரை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முழுமையாக சீரழிக்கும் இந்த போதைப்பொருட்களில் இருந்து நாம் தான் நம் பிள்ளைகளைக் காப்பாற்றவேண்டும்.

மதுரையில் பலகோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தோமெட்டபைன் போதைப்பொருள் இன்று காலை பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இன்னும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கஞ்சா, கொக்கைன், ஹெராயின் என வளர்ந்து இன்றைக்கு மெத் வரை நீளும் அனைத்து போதைப் பொருட்களும் சர்வசாதாரணமாகப் புழங்கும் மாநிலமாக தமிழ்நாட்டை இந்த திமுக அரசு மாற்றியிருப்பது மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உரியது.

தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே சவக்குழியில் தள்ளும் இந்த போதைப் பொருள் புழக்கத்தை தடுக்காமல், போதை மாபியா தலைவனுக்கு முதல் குடும்பத்துடன் நெருக்கமும் அரசியல் பதவி பின்புலமும் அளித்து ஊக்குவித்த திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினுக்கு என்னுடைய கடும் கண்டனம் என்று தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிறந்தநாள்… தொண்டர்களின் வாழ்த்து மழையில் நனைந்த ஸ்டாலின்

காதலிக்க நேரமில்லை: ஜெயம் ரவிக்கு திருப்பம் அளிக்குமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share