எடப்பாடி பழனிசாமி மனுவை ஏற்க கூடாது: தயாநிதி மாறன் ஆட்சேபம்!

Published On:

| By Kavi

அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை ஏற்கக் கூடாது என தயாநிதிமாறன்  ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

ADVERTISEMENT

அப்போது மத்திய சென்னை எம்.பி.தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தயாநிதிமாறன் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியதோடு, அவதூறு வழக்கும் தொடர்ந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்தார்

ADVERTISEMENT

இந்தநிலையில் இன்று (நவம்பர் 5) எடப்பாடி பழனிசாமியின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல என ஆட்சேபம் தெரிவித்து, தயாநிதி மாறன் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.) அமலுக்கு வரும் முன்பே இந்த அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  அதனால், அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி பி.என்.எஸ்.எஸ். சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை ஏற்க கூடாது.

மேலும், குற்றச்சாட்டுகள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாசித்து காட்டப்பட்டு விட்டதால், வழக்கில் இருந்து விடுவிக்க கோர முடியாது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான வாதங்களுக்காக, அவதூறு வழக்கு விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்கு நீதிபதி ஜி.ஜெயவேல் ஒத்திவைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

ஒரே மேடையில் விஜய்யுடன் பங்கேற்பா? : திருமா பதில்!

மகாராஷ்டிரா தேர்தல்: 4140 வேட்பாளர்கள் போட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share