எடப்பாடி பழனிசாமியின் கிப்லி டிரெண்டு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. edappadi palaniswami join with GhibliTrend
தற்போதைய நவீன மற்றும் சமூக ஊடக யுகத்தில் தினம் தினம் ஒரு புதிய டிரெண்டு வந்துகொண்டே இருக்கிறது. சாட் ஜிபிடி, ஏஐ, க்ரோக் -ஐ தொடர்ந்து தற்போதைய டிரெண்டிங்கில் கிப்லி உள்ளது.
இந்த AI-generated animation படங்கள் பெரிய அளவில் கவனம் பெறுகிறது.
இதைவைத்து காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர், தனது புகைப்படத்தை அனிமேஷனமாக மாற்றி வெளியிட்டிருந்தார்.
அவரை தொடர்ந்து பிரதமர் மோடியும் கிப்லி டிரெண்டிங்கில் இணைந்தார்.
பிரதமர் மோடி ராணுவ சீருடையில், மூவர்ணக் கொடியை ஏந்தியபடி இருப்பது, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் ஆகிய உலகத் தலைவர்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்களை கிப்லி அனிமேஷன் புகைப்படமாக இந்திய அரசாங்க ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியும் தனது புகைப்படங்களை கிப்லி அனிமேஷனில் வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ்நாட்டின் இதயத்திலிருந்து ஸ்டுடியோ கிப்லி உலகம் வரை… எனது மிகவும் மறக்கமுடியாத சில தருணங்களை காலத்தால் அழியாத கலையுடன்” என்று சிலாகித்துப் பதிவிட்டுள்ளார். edappadi palaniswami join with GhibliTrend