மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இரண்டாவது நாளாக ஆலோசனை!

Published On:

| By Selvam

Edappadi Palaniswami held meeting

2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் அதிமுக, பூத் கமிட்டியை வலுப்படுத்துவது, தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதில் முனைப்புக் காட்டி வருகிறது.

அந்தவகையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (மே 30) இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

நேற்று (மே 29) காலை புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 22 மாவட்ட செயலாளர்களுடன் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். Edappadi Palaniswami held meeting

இன்று இரண்டாவது நாளாக காலை 9.30 மணிக்கு திருப்பூர், கோவை, நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்தக் கூட்டத்தில், அடுத்த மாத இறுதிக்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும், திண்ணை பிரச்சாரங்கள் மூலம் அதிமுக செய்த சாதனைகளையும் திமுக அரசின் தவறுகளையும் பொதுமக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். மேலும், ராஜ்யசபா பதவிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. Edappadi Palaniswami held meeting

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share