அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்களை 20 எம்.எல்.ஏ-க்கள் இன்று (ஜூன் 4) முன்மொழிந்தனர்.
தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.
திமுக மற்றும் கூட்டணி கட்சியான மநீம சார்பில் 4 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். edappadi palaniswami held aiadmk mla meeting
இந்தநிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின்போது, அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோரை தலா 10 எம்எல்ஏ-க்கள் முன்மொழிந்தனர். ஜூன் 6-ஆம் தேதி அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். edappadi palaniswami held aiadmk mla meeting