ADVERTISEMENT

மதுரை முருகன் மாநாடு… எடப்பாடி ரியாக்‌ஷன்!

Published On:

| By Selvam

Edappadi Palaniswami express wishes

மதுரையில் நடைபெற உள்ள முருகன் மாநாட்டிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 21) வாழ்த்து தெரிவித்துள்ளார். Edappadi Palaniswami express wishes

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் மதுரை முருகன் மாநாடு குறித்து கேள்வி எழுப்பினர்.

ADVERTISEMENT

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “ஒவ்வொருவரும் அவரவர் விரும்புகின்ற தெய்வங்களை வழிபடுவது ஜனநாயகத்தின் உரிமை. அதனடிப்படையில் மதுரையில் மாநாடு நடத்துகிறார்கள். அதற்கு எங்களுடைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதையெல்லாம் மடைமாற்றம் செய்வதற்காக கேலிச்சித்திரங்கள், அவதூறு செய்திகளை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள்” என்றார்.

ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் விரைவில் வரும் என்று அமித்ஷா சொல்லியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி, “அவருடைய கருத்தை சொல்லியிருக்கிறார். அதேவேளையில், அனைவருக்கும் தாய்மொழி என்பது முக்கியம் என்பதையும் அமித்ஷா சொல்லியிருக்கிறார்” என தெரிவித்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share