டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி தற்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசி வருகிறார்.
வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அதிமுக, அமமுக ,பாஜக, பாமக, புதிய நீதிக் கட்சி, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன.
மதுரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அதிமுக நிர்வாகிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 2) டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அதாவது பாஜக 50 சீட் கேட்டிருக்கிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி இதற்கு ஒத்துக்கொள்ள வில்லை. இந்த பின்னணியில் தான் அவர் டெல்லி சென்றுள்ளார். இதுகுறித்து நமது மின்னம்பலத்தில் 50 சீட் கேட்கும் பாஜக.. ஆடிப் போன எடப்பாடி.. டெல்லி விசிட் பின்னணி! என்ற தலைப்பில் வெளியான டிஜிட்டல் திண்ணையில் விரிவாக சொல்லியிருந்தோம்.
இந்தசூழலில் தற்போது அமைச்சர் அமித்ஷா வீட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதில், பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் கொடுப்பது என்பது இறுதி செய்யப்படும் என தகவல்கள் வருகின்றன.
