’தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராயம்’: எடப்பாடி கண்டனம்!

Published On:

| By christopher

திமுக அரசின் நிர்வாக திறமையின்மையால் கள்ளச்சாராய கலாச்சாரம் தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கடலோரப் பகுதியான மரக்காணம் மீனவர் கிராமத்தில் விஷச் சாராயம் குடித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அரசுக்கு தனது சமூகவலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், “மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேர் மரணம் அடைந்ததாகவும், மேலும் 16 பேர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க பட்டிருப்பதாகவும் வருத்தத்துக்குரிய செய்திகள் வருகிறது.

ADVERTISEMENT

மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சிகிச்சை பெற்று வருவோரை கவனத்துடனும் அக்கறையுடனும் கவனித்து அவர்களின் உயிரை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்.

ADVERTISEMENT

கடந்த 10 ஆண்டு கழக ஆட்சியில் கள்ளச்சாராயம் என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்த ஆட்சியின் நிர்வாக திறமையின்மையால் கள்ளச்சாராய கலாச்சாரம் தமிழ்நாட்டில் தலைதூக்கியுள்ளது.

இதே மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை தீவிரமாக இருப்பதாக கடந்த ஜனவரி மாதமே செய்திகள் வந்தன. அவற்றை அறிந்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தற்போது நிகழ்ந்துள்ள இந்த மரணங்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இனியாவது கள்ளசாராயத்தை அறவே ஒழிக்க நடவடிக்கைகளை எடுக்க இந்த அரசை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கர்நாடகாவில் களேபரம்: நள்ளிரவில் கைமாறிய காங்கிரஸின் வெற்றி!

தமிழகத்தில் விஷ சாராயம் குடித்து மூவர் பலி: 24 பேர் உயிருக்கு போராட்டம்… முழு விபரம் என்ன?

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share