ஒடிசா ரயில் விபத்து: எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

Published On:

| By christopher

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில் நேற்று (ஜூன் 2) இரவு 7 மணியளவில் தடம்புரண்டது.

ADVERTISEMENT

அதனைத்தொடர்ந்து யஷ்வந்தபூர் – ஹவுரா ரயில் மற்றும் சரக்கு ரயில்களும் மோதியதில் கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 288 ஆகவும், காயமடைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

ADVERTISEMENT

இதனையடுத்து தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்கநாளாக அனுசரிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதில், “ஒடிஷாவின் பாலசோர் மாவட்டம் அருகே சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா ரெயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதிய ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

அதிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அறிந்து சொல்லொன்னா துயறுற்றேன்,

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்பையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன்.

அது மட்டுமில்லாமல் தமிழக பயணிகளின் உற்றார் தொடர்பு கொள்ள தனி அவசர தொடர்புக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டுமனவும், இந்த கோர ரெயில் விபத்தில் இறந்த தமிழக பயணிகளுக்கு உரிய நிவாரண தொகையும் ,காயமுற்றோருக்கு நிதி உதவியும் உடனடியாக வழங்க வேண்டுமாய் வலியுறுத்துகிறேன்.” என்று எடப்பாடி தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ரயில் விபத்து: தமிழ்நாட்டில் இன்று துக்க நாள் அனுசரிப்பு!

ஒடிசா ரயில் விபத்து: புவனேஷ்வர் – சென்னை சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share