கருப்பு பேட்ச்சுடன் ஸ்டாலின் செய்த சம்பவம்… எடப்பாடி தாமதம்!

Published On:

| By vanangamudi

கடந்த வாரம் வக்ஃப் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மக்களவையில் இன்று (ஏப்ரல் 3) அதிகாலை வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக மற்றும் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு பேட்ச் அணிந்து சென்றனர். Edappadi Palanisamy comes late

சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று (ஏப்ரல் 3) தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் வக்ஃப் சட்டத்திற்கு எதிராக பேசிக்கொண்டிருந்தபோது, அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்திற்கு வரவில்லை.

இதுதொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ-க்கள் வட்டாரத்தில் விசாரித்தோம்…

“எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்திற்கு செல்வதற்காக இன்று காலை 8 மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டார். சட்டமன்றத்தில் வக்ஃப் மசோதாவிற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் பேசப்போகிறார் என்ற தகவல் அறிந்ததும், இந்த நேரத்தில் சட்டமன்றத்திற்கு சென்றால் நன்றாக இருக்காது என்று எடப்பாடி முடிவெடுத்தார். அதனால், மதியம் 12 மணிக்கு சட்டமன்றம் வந்தார்.

ஏற்கனவே, வக்ஃப் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய போது எடப்பாடி கலந்துகொள்ளவில்லை. ஆனால், அதிமுக இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தது. இருப்பினும், இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக எதிரானது என்று ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். அதனால், சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் என்ற முடிவுடன் எடப்பாடி லேட்டாக வந்தார்” என்கிறார்கள். Edappadi Palanisamy comes late

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share