அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த போது மூன்று கார்களை பயன்படுத்தியுள்ளார். Edappadi Palanisamy change car
நேற்று (மார்ச் 26) தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அவரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வேலுமணி ஆகியோரும் டெல்லி சென்றனர்.
டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றால் இன்னோவா கார் வழங்கப்படும். ஆனால், அதை தவிர்த்த எடப்பாடி பிரைவேட் இன்னோவா காரிலேயே சாகேத் பகுதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்திற்கு சென்றார்.
அங்கு புதிதாக திறப்பு விழா கண்ட கட்சி அலுவலகத்தை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இரவு 8 மணியளவில் ஆடி காரில் சென்றார். இரண்டு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாகவே இந்த கூட்டத்தில் முழுக்க முழுக்க விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமித்ஷா உடனான சந்திப்பை முடித்துவிட்டு அவரது வீட்டில் இருந்து வெளியே வரும் போது எடப்பாடி பழனிசாமி பென்ட்லி காரில் வந்தார். அதாவது… உள்ளே சென்றபோது ஆடி காரை பயன்படுத்திய எடப்பாடி பழனிசாமி, வெளியே வரும்போது சீக்ரெட்டாக பென்ட்லி காரில் வந்தார்.
இப்படி டெல்லியில் நேற்று இன்னோவா, ஆடி, பென்ட்லி என அடுத்தடுத்து விதவிதமான மூன்று கார்களை எடப்பாடி பயன்படுத்தியுள்ளார். அமித்ஷா உடனான தனது சந்திப்பை சீக்ரெட்டாக நடத்த வேண்டும் என்பதற்காகவே இந்த கார் மாற்றங்கள் என்கிறார்கள். Edappadi Palanisamy change car