அதிமுக பொதுக்குழு இன்று காலை 9.30க்கு நடைபெறவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்திலிருந்து 7 மணியளவில் கிளம்பினார்.
பொதுக்குழுவுக்குத் தடை கேட்ட வழக்கின் தீர்ப்பு 9 மணிக்கு வர இருக்கும் நிலையில், 9.30க்கு நடைபெறும் பொதுக்குழுவுக்காக அதிமுக தலைமை கழக செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டிலிருந்து கிளம்பினார். கடந்த முறை பொதுக்குழுவுக்கு காரில் சென்ற எடப்பாடி பழனிசாமி இந்த முறை பிரசார வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறார்.
அவரது இல்லம் அமைந்துள்ள பசுமை வழிச்சாலை முதல் வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
“எடப்பாடியார் வாழ்க, ஒற்றைத் தலைமையே வருக” என கோஷமிடுவதுடன் அவரது வாகனத்தின் மீது மலர்களைத் தூவி வரவேற்பு கொடுத்து வருகின்றனர். கெண்டை மேளம் முழங்க, தொண்டர்கள் சூழ வந்துகொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி மண்டபத்துக்கு 9 மணிக்கு வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-பிரியா