பாஜகவினருடன் அடுத்தடுத்து மீட்டிங் – எச்.ராஜாவை சந்தித்த எடப்பாடி

Published On:

| By Kavi

சென்னையில் திருமண விழா ஒன்றில் எடப்பாடி பழனிசாமி, பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார்.  Edappadi meets H Raja

சென்னை திருவான்மியூரில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில்  பாஜக செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காயத்ரி தேவியின் மகள் திருமண விழா நேற்றும் இன்றும் நடைபெற்று வருகிறது. 

ADVERTISEMENT

நேற்று மாலை நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில்  ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தர ராஜன், தற்போதைய தலைவர் அண்ணாமலை,   பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  

ADVERTISEMENT

இந்த விழாவிற்கு காரில் வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை அண்ணாமலை சந்தித்து கைகுலுக்கி நலம் விசாரித்தார்.

தொடர்ந்து இன்று (மார்ச் 12) நடைபெற்ற திருமண விழாவில்,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

ADVERTISEMENT

காலை 10.30 மணியளவில் எடப்பாடி பழனிசாமி வரும்போதே வாசலில் அவரை கரு.நாகராஜன் வரவேற்று அழைத்து வந்தார். மேடையில் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு எடப்பாடி பழனிசாமி வரும்போது, அவரும் எச்.ராஜாவும் சந்தித்து கொண்டனர்.  இருவரும் கைகுலுக்கி பரஸ்பர நலம் விசாரித்துகொண்டனர். 

இதுதொடர்பாக எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது சிம்பிளான விஷயம்.  திருமண நிகழ்வில்  இருவரும் குசலம் விசாரித்துக்கொண்டோம். அரசியல் பேசவில்லை.  பாஜக கூட்டணி பற்றி தேசிய தலைமைதான் முடிவு செய்யும்” என்று பதிலளித்தார்.

எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகளை சந்திப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

கோவையில் நடந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் ஏர்போர்ட் வந்த எடப்பாடி பழனிசாமி, அங்கு காத்திருந்த  சிபி ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரனை சந்தித்தார்.

இந்தசூழலில் இன்று எச்.ராஜாவிடம் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். 

அதே சமயம் வேலுமணி இல்ல திருமண நிகழ்வில் பாஜக தலைவர்கள் கலந்துகொண்டதும்,  அண்ணாமலையை முன்னாள் அமைச்சர்கள் இன்முகத்துடன் வரவேற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  Edappadi meets H Raja

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share