எடப்பாடி டெல்லி பயணம்… ஸ்டாலின் வைத்த கோரிக்கை!

Published On:

| By Selvam

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக இன்று (மார்ச் 25) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார். Edappadi Delhi visit Mk Stalin

இந்த டெல்லி பயணத்தை குறிப்பிட்டு சட்டமன்றத்தில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின், “இருமொழி கொள்கை குறித்து என்ன உணர்வோடு நாங்கள் இருக்கிறோம் என்பதை பாஜக தவிர்த்து பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி காட்டியிருக்கின்றன.

இங்கு பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், இருமொழி கொள்கை தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்ததாகவும், அந்த கடிதத்திற்கு தமிழக அரசு சரியான விளக்கம் அளிக்கவில்லை என்ற ஒரு தகவலை சொல்லியிருக்கிறார்.

தயவுசெய்து எந்த சந்தேகமும் பட வேண்டாம். நாங்கள் இருமொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். மும்மொழிக்கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தான் மத்திய அரசுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறோம்.

இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகளை வைக்கிறேன். இன்று காலை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. டெல்லியில் அவர் யாரை சந்திக்க போகிறார் என்ற செய்தியும் வந்திருக்கிறது. அப்படி சந்திக்கிற நேரத்தில் இருமொழி கொள்கை குறித்து அவர் வலியுறுத்த வேண்டும் என்று இந்த அவையின் மூலம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். Edappadi Delhi visit Mk Stalin

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share