எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளான இன்று (மே 12) சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் 70 கிலோ கேக் வெட்டி கொண்டாடினார்.
அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 70வது பிறந்தநாளை இன்று (மே 11) கொண்டாடி வருகிறார்.
தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அவரது 70வது பிறந்தநாளை முன்னிட்டு, 70 கிலோ கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது கேக் கில் மூன்று இடங்களில் தாமரைப் பூ வடிவிலான மெழுகுவர்த்தி அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு தாமரை பூவில் உள்ள மெழுகுவர்த்தியை ஏற்றிய எடப்பாடி, அதை ஊதியணைத்ததும், ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று நிர்வாகிகள், தொண்டர்கள் முழக்கமிட்டனர்.
எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் கேக்கில் தாமரை பூ வடிவ மெழுகுவர்த்திகளை செருகியிருக்கிறார்களே என்று அங்கே இருந்த நிர்வாகிகள் சிரித்தபடியே பேசிக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன், செம்மலை, ஆத்தூர் இளங்கோவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஒவ்வொருவராக பரிசுப்பொருட்களை வழங்க அதனைப் பெற்றுக்கொண்டார். மேலும், பட்டாசு வெடித்து சீர்வரிசைகளுடன் வந்த அதிமுக நிர்வாகிகள் சிலர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், முன்னாள் ஆளுநரும், பாஜகவின் தென்சென்னை வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன், எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு இன்று சென்னை வந்த தமிழிசை சவுந்தரராஜன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். கொள்கை மாற்றம் இருந்தாலும் அரசியல் நாகரீகம் கடைப்பிடிக்க வேண்டும்” என வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IPL 24: பிளே ஆஃப்க்கு தகுதி பெறுமா சிஎஸ்கே? – டென்ஷனில் ரசிகர்கள்!
‘அம்மா என்னும் மந்திரமே… அகிலம் யாவும் ஆள்கிறதே…’ : மறக்கமுடியாத நினைவுகள்!