தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (மார்ச் 18) தனது 60-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தேமுதிக நிர்வாகிகள் சார்பில் தமிழகம் முழுவதும் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரேமலதா விஜயகாந்துக்கு திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். Edappadi Annamalai wishes Premalatha

முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பிரேமலதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அன்பு சகோதரி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மக்களின் நலனுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் என்றும் சிறக்கவும், நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, மற்றும் மக்களின் நலனுக்காக உங்கள் சேவை தொடரவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
அக்கா பிரேமலதாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன்
அன்பு சகோதரி, பிரேமலதா விஜயகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கட்சி எல்லைகள் கடந்து மிகவும் அன்பாக என்னிடம் பழகக் கூடியவர். இறைவனின் அருளால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன்,நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்
பிரேமலதா விஜயகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல்நல ஆரோக்கியத்தோடு, நீடித்த மகிழ்ச்சியோடு உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துகள்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி தலைவர் ஜான் பாண்டியன்
பிரேமலதா நீண்ட ஆயுளுடன் தொடர்ந்து மக்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். Edappadi Annamalai wishes Premalatha
