நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுடைய தொழில் நிறுவனங்களிலும், மகன் அருண் நேரு தொழில் நிறுவனத்திலும் இன்று (ஏப்ரல் 7) காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ED searches KN Nehru
அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு தான் முதலில் குறிவைக்கப்பட்டதாகவும், கடைசி நேரத்தில் குறி மாற்றப்பட்டதாகவும் அமலாக்கத்துறை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிகின்றன.

குடும்பத்தினர் அலுவலகங்களில் ரெய்டு நடந்து வந்தபோதிலும், சட்டப்பேரவைக்கு வருகை தந்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் தந்து வருகிறார் அமைச்சர் நேரு.
வருமான வரித்துறையிலிருந்து வந்த தகவல்களை அடுத்து இந்த ரெய்டு நடத்தப்படுவதாகவும், அமலாக்கத்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.