புதுக்கோட்டை: பாஜக, அதிமுக நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

Published On:

| By Selvam

புதுக்கோட்டையில் பாஜக மேற்கு மாவட்ட பொருளாளர் முருகானந்தம் மற்றும் அவரது சகோதரர் பழனிவேல் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (நவம்பர் 29) காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை பாஜக மேற்கு மாவட்ட பொருளாளர் முருகானந்தம். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது சகோதரர் பழனிவேல், புதுக்கோட்டை அதிமுக எம்ஜிஆர் அணி மாவட்ட செயலாளராக உள்ளார்.

ADVERTISEMENT

கடந்த 2016 – 2021 அதிமுக ஆட்சிக்காலத்தின் போது, சோலார் விளக்குகள் அமைத்தல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்த பணிகளில் முருகானந்தம் மற்றும் பழனிவேல் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய விசாரணையில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

ADVERTISEMENT

இந்தநிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த தகவலின் படி புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள முருகானந்தம் வீட்டிலும், ஆலந்துறையில் உள்ள பழனிவேல் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் இருந்து சென்ற 20-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புடன் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

ஆளும் கட்சி புள்ளிகளைக் குறிவைத்து மட்டுமே அமலாக்கத்துறை சோதனை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பாஜக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

ADVERTISEMENT

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது’… ஹாலிவுட் ஸ்டைலில் ‘விடாமுயற்சி’ டீசர்!

கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு கிராக்கி: விவசாயிகள் மகிழ்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share