தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 16) சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதப் பணிப்பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனைகள் நடைபெறுகின்றன.
அமைச்சர் ஐ.பெரியசாமியின் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லம், சென்னையில் ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமாரின் எம்.எல்.ஏ விடுதி அறை உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் உள்ள ஐ.பெரியசாமி, அவரது மகன் ஐபி செந்தில்குமார் ஆகியோரது வீடு, மதுரையில் ஐ.பெரியசாமி மகள் இந்திராவின் வீடு ஆகிய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை 7.30 மணி முதல் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
