ADVERTISEMENT

மணல் குவாரிகளில் ரெய்டு : ED பறிமுதல் செய்தது என்ன?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் 12.82 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மணல் குவாரிகள், குவாரி உரிமையாளர்கள், கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

ADVERTISEMENT

இந்த சோதனை குறித்து அமலாக்கத் துறை இன்று (செப்டம்பர் 15) வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “தமிழகத்தின் 6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரிகள் உட்பட 34 இடங்களில் செப்டம்பர் 12ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது.

எஸ்.ராமச்சந்திரன், கே.ரத்தினம், கரிகாலன் மற்றும் அவர்களது கூட்டாளிகள், ஆடிட்டர் பி.சண்முகராஜ் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது.

ADVERTISEMENT

சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

இதில் பல்வேறு குற்ற ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. 12.82 கோடி ரூபாய் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கணக்கில் வராத ரூ.2.33 கோடி பணம். ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024.6 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.

பிரியா

மதிமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

விஏஓ கொலை : குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share