அமைச்சர் நேரு வீட்டில் ED ரெய்டு : காரணம் இதுதானா?

Published On:

| By Kavi

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு தொடர்புடைய இடங்களில் இன்று (ஏப்ரல் 7) அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. ed raid in minister kn nehru related places

அமைச்சர் நேரு, அவரது மகனும் பெரம்பலூர் எம்பியுமான அருண் நேரு, அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை தொடங்கி அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. 

சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, எம்ஆர்சி நகர் உள்ளிட்ட பத்து இடங்களில் அதிகாரிகள் சோதனையில ஈடுபட்டனர்.

திருச்சி தில்லை நகர் 5வது குறுக்குத் தெருவில் உள்ள அமைச்சர் நேரு வீட்டுக்கு காலை 6.45 மணியளவில் சென்ற அதிகாரிகள், துணை ராணுவ பாதுகாப்பு படையினர் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். 

பாரதிநகரில் வசிக்கும் நேருவின் மகள் ஹேமா மற்றும் அவரது கணவர் ஆனந்த் ஆகியோரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். 

சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனை மாலை 5.30 மணிக்கு நிறைவு பெற்றது. இன்றைய சோதனையின் போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அமலாகத் துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தகவல்கள் வரும் நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

2020 -2021ல் தேசிய வங்கியில் வாங்கிய கடனை கட்ட தவறியதால், அது சம்பந்தமாக வருமானவரித்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த  சோதனை நடந்ததாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த சோதனைக்குப் பின்னர் அமைச்சர் நேருவின் இல்லம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். ed raid in minister kn nehru related places

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share