எம்புரான் பட தயாரிப்பாளரை குறிவைத்து ED ரெய்டு!

Published On:

| By Aara

தமிழகம் மற்றும் கேரளாவில் இயங்கி வரும் கோகுலம் நிதி நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஏப்ரல் 4) காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் உரிமையாளரான கோகுலம் கோபாலனின் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடந்து வருகின்றது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட மீறல்கள் தொடர்பாக இந்த சோதனை நடந்து வருவதாக தெரிகிறது. ED raid against Empuraan Producer

ஆனால் இந்த ரெய்டுக்கு பின்னால் சமீபத்தில் சர்ச்சைக்கு உள்ளான எம்புரான் திரைப்பட விவகாரம் தான் இருக்கிறது என்கிறார்கள்.

மோகன்லால், பிரித்விராஜ் நடித்து அண்மையில் வெளிவந்த எம்புரான் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் குஜராத் மதக் கலவர காட்சிகள் உள்ளிட்ட பாஜகவுக்கு எதிரான ஆர்எஸ்எஸ்-க்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கேரளாவில் வலது சாரி குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இந்த திரைப்படத்தில் இருந்து 27 காட்சிகள் வெட்டப்பட்டு மீண்டும் திரையிடப்பட்டன.

இந்த படத்தின் தயாரிப்பாளர்களான ஆண்டனி பெரும்பாவூர், சுபாஷ்கரன், கோகுலம் கோபாலன் ஆகிய மூவரில் கோபாலனுக்கு சொந்தமானதுதான் கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனம்.

பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிரான கருத்துகள் கொண்ட படத்தை தயாரித்த காரணத்துக்காகவே, இப்படத்தைத் தயாரித்த கோகுலம் சிட்பண்ட்ஸ் சை குறிவைத்து அமலாக்கத்துறை இறங்கியிருக்கிறது என்று கேரள சினிமா உலகிலும் சமூக தளங்களிலும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. ED raid against Empuraan Producer

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share