திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது!

Published On:

| By Monisha

ED officer arrested in dindigul

திண்டுக்கல்லில் மருத்துவரிடம் இருந்து லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவர் மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார். இது குறித்து மருத்துவர் லஞ்ச ஒழிப்புத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த தகவலின் அடிப்படையில் இன்று (டிசம்பர் 1) திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான தனிப்படையினர் லஞ்சப்பணத்தோடு அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரியிடம் இருந்த ரூ.20 லட்சம் பணத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்ந்து திண்டுக்கல் ஈபி காலனியில் இருக்க கூடிய லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அங்கித் திவாரியை அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது பேசு பொருளாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

மோனிஷா

10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார்: அமைச்சர் ரகுபதி

பத்திரப்பதிவுத்துறையில் ஸ்டார் 3.0 திட்டம்: சிறப்பம்சங்கள் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share