சென்னையில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கொள்முதல், விற்பனையில் ரூ1,000 கோடிக்கும் அதிகமாக ஊழல் நடைபெற்றுள்ளது என்பது அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு. இது தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் பல இடங்களில் சோதனைகள் நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றி இருந்தனர்.
இந்த நிலையில் சென்னையில் இன்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது விசாகன் வீட்டில் வைத்து பல மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விசாகன், அவரது மனைவி ஆகியோரை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.