நேதாஜியை மையமாக வைத்து உருவான ’ஸ்பை’: ரிலீஸ் எப்போது?

Published On:

| By christopher

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மறைக்கப்பட்ட வரலாற்றை மையமாகக் கொண்டு தயாராகி இருக்கும் ’ஸ்பை’ திரைப்படம் திட்டமிட்டபடி வரும் ஜூன் 29ஆம் தேதியன்று வெளியாகும் என படக்குழு உறுதிப்படுத்தி உள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தொகுப்பாளரும், இயக்குநருமான கேரி பி.ஹெச் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரில்லர் திரைப்படம் ‘ஸ்பை’.

ADVERTISEMENT

இதில் நிகில் சித்தார்த்தா, ஆரியன் ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், சான்யா தாகூர், அபினவ் கோமடம், மகரந்த் தேஷ் பாண்டே, ஜிஷு சென்குப்தா, நித்தின் மேத்தா, ரவிவர்மா, கிருஷ்ண தேஜா, பிரிஷா சிங், சோனியா நரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ED entertainments announced date of spy release

ஸ்ரீ சரண் பகாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்கான படத்தொகுப்பு பணிகளையும் இயக்குநர் கேரி பி.ஹெச் கவனித்திருக்கிறார்.

ADVERTISEMENT

த்ரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ராஜசேகர் ரெட்டி இப்படத்தின் கதையை எழுதி தயாரித்திருக்கிறார். 

ED entertainments announced date of spy release

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் அனைத்து மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகாது என்றும், ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்றும் இணையதளத்தில் தகவல்கள் வெளியாயின.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மறைக்கப்பட்ட கதை மற்றும் ரகசியங்களை மையமாகக் கொண்டு தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், எந்தவித தாமதமின்றி, திட்டமிட்டபடி வரும் ஜூன் 29ஆம் தேதியன்று வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தெளிவுப் படுத்தி இருக்கிறார்கள். 

இராமானுஜம்

’சமோசா சாப்பிட்டால் ரூ.71 ஆயிரம்’: ஆனா ஒரு கண்டிஷன்!

சென்னை மழை… ’மக்களுக்கு பாதிப்பு இல்லை’- அமைச்சர் சேகர் பாபு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share