சென்னையில் இன்று (மார்ச் 9) காலை முதல் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
குறிப்பாக சென்னை ஆர்.ஏ.புரத்தில் வசித்து வரும் கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் வீடு மற்றும் வேப்பேரி, மயிலாப்பூர் பகுதிகளில் கட்டுமான தொழிலதிபர்கள் வீடுகளில் இந்த சோதனையானது நடந்து வருகிறது.
இந்தநிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனா. கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது ஆதவ் அர்ஜூனாவின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…