ஈசிஆர் சேஸிங் : கார்கள் பறிமுதல்!

Published On:

| By Kavi

ecr chase police seizure two cars

ஈசிஆர் கார் சேஸிங் வழக்கில், பெண்களை துரத்திய இரு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ecr chase police seizure two cars

சென்னை நகரம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் முதலிடத்தில் உள்ளதாக தேசிய குற்றப்பிரிவு ஆவணக்காப்பகம் கூறுகிறது.

ADVERTISEMENT

ஆனால் அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பது சென்னையில் தொடர்கதையாகியுள்ளது.

இந்தநிலையில் தான் ஈசிஆர் சாலையில் காரில் சென்ற பெண்களை ஆளும் திமுக கட்சியின் கொடி கட்டியிருந்த சஃபாரி மற்றும் தார் கார்கள் விரட்டிச் சென்ற பகீர் வீடியோ வெளியானது.

ADVERTISEMENT

கண்காணிப்பு வளையத்தில் இளைஞர்கள்

ecr chase police seizure two cars
கானத்தூர் காவல் நிலையம்

ecr chase police seizure two cars

இதுதொடர்பாக மின்னம்பலத்தில் நாம் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், காரின் உரிமையாளர்கள் யார்? காரில் வந்த இளைஞர்கள் யார்? என தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தோம்.

ADVERTISEMENT

இதில் சஃபாரி கார் கன்னியாகுமரியை சேர்ந்ததும், தார் கார் நங்கநல்லூரைச் சேர்ந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

காரில் வந்த பெண்களில் ஒருவரான செல்வி. சன்னி திலாங் அளித்த புகாரின் பேரில், கானத்தூர் காவல்நிலைய மனு ரசீது எண் 22/2025 நாள் 26.01.2025 வழங்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டு தொடர்ந்து கானத்தூர் காவல் நிலைய குற்ற எண். 16/2025 u/s126(2), 296(b), 324(2), 351(2) BNS r/w 4 of TNPHW Act பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பெண்களை விரட்டிச் சென்ற அந்த இரு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அந்த இளைஞர்கள் சிலரையும் போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் வைத்து விசாரித்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

பெண்கள் மறுப்பு! ecr chase police sei

இதற்கிடையே அந்த பெண்கள் வந்த கார், சஃபாரி கார் மீது உரசியதால் தான் அந்த இளைஞர்கள் துரத்தி வந்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்ட நிலையில், இதற்கு சன்னி திலாங் தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.

“நாங்கள் அந்த காரைத் தொட கூட இல்லை. நாங்கள் ஏன் துரத்தப்பட்டோம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. தவறான தகவல் பறிமாற்றம் நடந்துள்ளது. நாங்கள் இரவில் புகார் அளித்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து எங்களுக்கு உதவினார்கள்” என்று பல்வேறு ஊடகங்களிடம் கூறியுள்ளனர். ecr chase police seizure two cars

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share