தேர்தலின் போது பதிவாகும் சிசிடிவி காட்சி பதிவுகளை பாதுகாத்து வைப்பதற்கான கால அளவை தேர்தல் ஆணையம் குறைத்துள்ளது. eci Order to destroy CCTV footage
சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களின் போது வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி காட்சிகள் பொறுத்தப்பட்டு அது பதிவு செய்யப்படும். வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தால் நீதிமன்றங்கள் அந்த சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவிடும்.
தேர்தல் தொடர்பான புகார் தொடர்ந்து எழுந்து வரும் சூழலில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மே 30ஆம் தேதி அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், தேர்தல் முடிவுகள் வெளியான 45 நாட்களுக்குப் பிறகு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படாவிட்டால், சிசிடிவி கேமரா, வெப்காஸ்டிங் மற்றும் தேர்தல் செயல்முறையின் வீடியோ காட்சிகள், புகைப்படங்களை அழிக்குமாறு தேர்தல் ஆணையம் மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
1961 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளின் விதி 93 ஐ மத்திய சட்ட அமைச்சகம் திருத்திய நிலையில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதாவது ஒரு வேட்பாளர் தேர்தல் முடிவுகள் வெளியான 45 நாட்களுக்குள் எந்தவொரு தனிநபரும் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களில் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்குத் தொடரலாம். இந்த கால அளவை கொண்டு சிசிடிவி கேமரா காட்சிகளின் கால அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
இது முன்னதாக குறைந்தது 90 நாட்கள் என்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. eci Order to destroy CCTV footage