Skip to content
  • முகப்பு
  • அரசியல்
  • சமூகம்
  • பொழுதுபோக்கு
  • சிறப்புக் கட்டுரை
  • ஸ்கூப் நியூஸ்
Ad 1
Ad 2

ஆபாச தளத்தின் ’லோகோ’வை பயன்படுத்த கோரிக்கை… பிரபல கிரிக்கெட் வீரருக்கு கண்டனம்!

Published On: 13 Aug 2025, 9:03 PM

| By christopher

WhatsAppFacebookXLinkedInTelegramShare
ecb banned tymal mills only fans logo request

ஆபாச இணையதளத்தின் லோகோவை தனது பேட்டில் பயன்படுத்த அனுமதி கோரிய நிலையில், இங்கிலாந்து அணி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

இங்கிலாந்துஅணியின் வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ். இவர் அந்நாட்டில் பிரபலமான கிரிக்கெட் தொடரான தி ஹண்ட்ரட் போட்டியில் சசெக்ஸ் ஷார்க்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.

ADVERTISEMENT

கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடந்து வரும் அத்தொடரில், ’ஒன்லிஃபேன்ஸ்’ லோகோவை பேட்டில் பயன்படுத்த இங்கிலாந்து அணி நிர்வாகத்திடம் அனுமதி கோரினார்.

ADVERTISEMENT

ஒன்லிஃபேன்ஸ் தளத்தின் மூலம் தனது ரசிகர்களுடன் உரையாடி வருவதாகவும், அதில் இருக்கும் தனது கணக்கை விளம்பரப்படுத்தும் வகையில் அந்த லோகோவை பயன்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) போட்டியின் நன்மதிப்பு கருதி மில்ஸின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது.

ADVERTISEMENT

மில்ஸ் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க!

காதலா? இல்ல இலவச சாப்பாடா? உஷார்… இது ‘ஹோபோசெக்சுவாலிட்டி’ (Hobosexuality) டிரெண்ட்!
வெற்றி பெறுகிறதா; டெபாசிட் இழக்கிறதா, ‘மாண்புமிகு பறை’? – விமர்சனம்
“ப்ளீஸ்… கொஞ்சம் கருணை காட்டுங்க!” – பயணிகளிடம் கைகூப்பி கேட்ட இண்டிகோ பைலட்! உருக வைக்கும் வைரல் வீடியோ!
டிரெண்டிங் வீடியோ: “இதெல்லாம் ஒரு இடமா?” இமயமலையைச் சுத்தம் செய்த வெளிநாட்டுப் பெண்… வெட்கித் தலைகுனிந்த நெட்டிசன்கள்!
“இது மெஸ்ஸியா? இல்ல ‘மெஸ்’ ஆன சிலையா?” – கொல்கத்தாவில் திறக்கப்பட்ட 70 அடி மெஸ்ஸி சிலை! வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
WhatsAppFacebookXLinkedInTelegramShare
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
About Us | Contact Us | Terms & Conditions | Privacy Policy
© 2025 - All Rights Reserved to Minnambalam
Share
WhatsAppFacebookMessengerXTelegramLinkedInCopyThreadsSMSTumblrEmailPinterestMastodonBufferBlueskyFlipboardHacker NewsLineMixPrintRedditVKXingYummly