பியூட்டி டிப்ஸ்: தொப்பையைக் குறைக்க எளிய வழி உண்டா?

Published On:

| By Monisha

Easy way to reduce belly fat

தொப்பை பகுதியில் உள்ள கொழுப்பை ‘விசெரல் ஃபேட்’ (Visceral Fat) என்று சொல்வோம். நீண்டகாலமாக உடற்பயிற்சியே செய்யாமலிருப்பது, உட்கார்ந்தே வேலை செய்வது, கொழுப்பைக் கரைக்க எந்த முயற்சியும் எடுக்காதது போன்ற காரணங்களால் இந்தக் கொழுப்பு அதிகரித்துக் கொண்டே போகும். இது மிகவும் ஆபத்தான கொழுப்பும்கூட. அது இன்ஸ்டன்ட்டாக குறையாது. நீண்டகாலம் எடுக்கும்.

தவறாத உடற்பயிற்சி, புரதச்சத்து நிறைந்த உணவுப்பழக்கம் ஆகியவற்றின் மூலம் இந்தக் கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். உங்களுக்கு எந்த அளவுக்கு தொப்பை இருக்கிறது என்பதைப் பொறுத்து அதைக் குறைக்கும் காலம் வேறுபடும்.

மிக அதிக அளவில் இருக்கும்பட்சத்தில் மருத்துவ ஆலோசனையோடு உடற்பயிற்சிகள் மற்றும் உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவதுதான் சரியானது. அளவுக்கதிகமான தொப்பையைக் குறைக்க சில நேரங்களில் அறுவைசிகிச்சைகூட தேவைப்படலாம்.

மற்றபடி 80 சதவிகிதம் வெயிட் டிரெயினிங் பயிற்சிகளையும் 20 சதவிகிதம் கார்டியோ பயிற்சிகளையும் செய்யத் தொடங்குங்கள். எடையைக் குறைப்பதில் உணவுப்பழக்கம் 80 சதவிகிதமும் உடற்பயிற்சி 20 சதவிகிதமும் உதவும். நிறைய புரதம், குறைந்த அளவு கார்போஹைட்ரேட், அதிக நார்ச்சத்துள்ள உணவுப்பழக்கம் ஒட்டுமொத்த எடைக் குறைப்புக்கும் நிச்சயம் உதவும். தொப்பையையும் குறைக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

இமெயில் டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி

கிச்சன் கீர்த்தனா: ஸ்பைசி ஸ்டிர் ஃப்ரை உருளைக்கிழங்கு!

மல்யுத்த கூட்டமைப்பிற்கு தற்காலிக நிர்வாக குழு!

திகாரா? இல்ல தி.நகரா?: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share