குளிர்காலத்தில் சருமம் வறட்சியின்றி பளபளக்கும்.. ஈஸியான வீட்டு வைத்தியங்கள் இதோ!

Published On:

| By Santhosh Raj Saravanan

Easy home remedies to protect your skin in winter

வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தியே குளிர்காலத்தில் சருமத்தை எளிமையாக பாதுகாக்கலாம்.

குளிர்காலத்தில் சருமத்திற்கு தேவையான ஈரத்தன்மை, எண்ணெய் பசை வழங்கும் சுரப்பிகளின் செயல்பாடுகள் குறையும். இதனால் சருமம் வறண்டு சுருக்கங்கள் உள்ளிட்ட மாற்றங்கள் ஏற்படும். குளிர் காற்று அதிகமாக வீசுவதால் சருமம் எளிதாக வறண்டு போக வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, வெயில் காலத்தைப் போலவே குளிர் காலத்திற்கும் சரும பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும். குளிர்காலத்தில் சருமத்தை நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே பாதுகாப்பாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கலாம். என்னதான் க்ரீம், சீரம்கள் பயன்படுத்தினாலும் வீட்டு வைத்தியம் இயற்கையாக நமது முகத்தை பரபளப்பாக மாற்றுகிறது.

ADVERTISEMENT

ரோஸ் வாட்டர் மற்றும் தேன் கலவை

ரோஸ் வாட்டர் எப்போதுமே வீடுகளில் இயல்பாக கிடைக்கக்கூடிய பொருளாக உள்ளது. ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் இயற்கையான அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் நிறைந்த இது, சருமத்திற்கு மென்மையான மாற்றுகிறது. ஒரு சிறிய கிண்ணத்தில் ரோஸ் வாட்டரை ஊற்றி, அதில் தேனை சம அளவு எடுத்து கலந்து முகத்தில் பூச வேண்டும். சுமார் பத்து நிமிடம் கழித்து முகம் கழுவி வந்தால் சருமம் புத்துணர்ச்சி அடைவதோடு பளபளப்பாக இருக்கும். இவ்வாறு செய்தால் பனிக்காலத்தில் சருமம் வறட்சியடையாமல் இருக்கும்.

ADVERTISEMENT

பீட்ரூட் ஃபேஸ் பேக்

பீட்ரூட் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, நம் சருமத்திற்கு பயன்படுத்தவும் ஏற்றது. பீட்ரூட்டில் நிறைய வைட்டமின்கள் உள்ளன. ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் இயற்கையாகவே சருமத்தில் இளஞ்சிறப்பு நிறத்தை அதிகரிக்கவும் இது உதவுகிறது.

ADVERTISEMENT

சிறிய பீட்ரூட் துண்டை நன்கு அரைத்து அதில் ஒரு தேக்கரண்டி பால் அல்லது தயிர் கலந்து பேஸ்ட் ஆக மாற்ற வேண்டும். முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் சருமம் பிரகாசம் அடைவது மட்டுமல்லாமல் சருமத்திற்கு உள்ளிருந்து ஊட்டமளிக்கும். வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை பீட்ரூட் பேஸ்பேக்கை முகத்திற்கு அப்ளை செய்யலாம்.

பால் மற்றும் பாதாம் பேஸ் ஸ்க்ரப்

பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ மற்றும் இயற்கை எண்ணெய்கள் நிறைந்துள்ளன. இது குளிர்கால வறட்சியை எதிர்த்துப் போராடுவதற்கு ஏற்றதாக உள்ளது. பாதாமை ஸ்க்ரப் ஆக பயன்படுத்துவது சருமத்தில் இறந்த செல்களை அகற்றி சருமத்தை ஆரோக்கியமாக நீடிக்க உதவுகிறது.

5 – 6 ஊற வைத்த பாதாமை நன்றாக பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு சிறிது பாலுடன் அதனை கந்தால் பாதாம் ஸ்க்ரம் ரெடியாகிவிடும். முகத்தில் மூன்று அல்லது ஐந்து நிமிடம் மெதுவாக மசாஜ் செய்து பின்னர் அதனை துடைக்க வேண்டும். கெமிக்கல் ஸ்க்ரப்களை நாம் பயன்படுத்தினால் அது கரடு முரடாக நம் சருமத்தை கீறல்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன. இந்த குளிர் காலத்தில் இந்த பாதாம் ஸ்கிரப் சருமத்திற்கு பாதுகாப்பு அளிப்பதோடு பொலிவையும் வழங்குகிறது.

குளிர்ந்த பால்

குளிர்ந்த பாலில் இயற்கையாகவே லாக்டிக் அமிலம் உள்ளது. இது சருமத்திற்கு மிகவும் நல்லது, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது மட்டுமில்லாமல் மென்மையாகவும் நிறத்தையும் அதிகரிக்கிறது. குளிர்ந்த பாலை முகத்தில் பூசி உலர விடவும். அதேபோல பருத்தித் துணியை எடுத்து பாலில் நனைத்து முகத்தை நன்றாக துடைக்கலாம். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவிய பிறகு முகம் பளபளப்பாகும். தினமும் காலை இதனை செய்வதன் மூலம் குளிர் காலத்தில் நாம் சரும பிரச்சனைகளிடமிருந்து விடுபடலாம்.

உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்

முகத்திற்கு வெளியே நாம் சருமப் பாதுகாப்புக்கு பேஸ் பேக்குகளை அப்ளை செய்தாலும் கூட, குளிர்காலத்தில் நாம் சாப்பிடும் உணவுகளிலும் சிறிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக குளிர்காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், இது சருமத்தை வறட்சியிலிருந்து பாதுகாக்கும். கெமிக்கல் சோப்புகள் அல்லது ஸ்கிரப்களை பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share